அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கூடுதல் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தல்: கணவர் உள்ளிட்ட நால்வர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியிடம், 100 பவுன் நகை வரதட்சிணையாகக் கேட்டு துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

News image
Updated On :23 நவம்பர் 2015, 4:56 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியிடம், 100 பவுன் நகை வரதட்சிணையாகக் கேட்டு துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

வத்திராயிருப்பு, சேசபுரத்தைச் சேர்ந்தவர் ஏ.மகேஸ்வரி (25). இவரும் ராஜபாளையம், காமராஜர் தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ராஜபிரபுவும், கிருஷ்ணன்கோவில் ஒரு கல்லூரியில் 2010-ம் ஆண்டு படிக்கும் போது ஒருவரையொருவர் காதலித்துள்ளார்கள். 26.9.2010-ம் தேதி சேத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டார்கள். 2013-ம் ஆண்டு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

கடந்த ஓராண்டாக, ராஜபிரபு தனது மனைவியை தந்தை ராதாகிருஷ்ணன், தாய் ரெங்கு, சகோதரி கனகபிரியா ஆகியோரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, 100 பவுன் நகை வரதட்சிணையாக வாங்கி வரும்படி கூறி துன்புறுத்தி, கொலை மிரட்டல் விடுத்துவந்தாராம்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மகேஸ்வரி, ஞாயிற்றுக்கிழமை புகார் செய்தார். காவல் ஆய்வாளர் எம்.மரியகுளோரி ராஜபிரபு உள்ளிட்ட நால்வர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.