அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கூடுதலாக வசூலித்த வட்டியை நஷ்ட ஈடு ரூ.8 ஆயிரத்துடன் வழங்க ஆணை

வாடிக்கையாளரிடம் கூடுதலாக வசூலித்த வட்டித் தொகையை, ரூ.8 ஆயிரம் நஷ்டஈட்டுத் தொகையுடன் வழங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :24 நவம்பர் 2015, 8:52 am

கோ.ஜெயக்குமார்

வாடிக்கையாளரிடம் கூடுதலாக வசூலித்த வட்டித் தொகையை, ரூ.8 ஆயிரம் நஷ்டஈட்டுத் தொகையுடன் வழங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.

ராஜபாளையம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் அ.கோவிந்தராஜ். இவர் ராஜபாளையம், தென்காசி சாலையில் உள்ள (ஆர்த்தி பைனான்ஸ்) தனியார் நிதி நிறுவனத்தில் 6.8.12-ம் தேதி 14.400 கிராம் தங்க நகையை அடகு வைத்து ரூ.26 ஆயிரம் பெற்றுள்ளார். நிறுவனம் அவசரப்படுத்தியதால், 31.3.2013-ம் தேதி அசலுக்குரிய வட்டி முழுவதையும் கோவிந்தராஜ் செலுத்தியுள்ளார். திரும்பவும் அசலும் வட்டியும் செலுத்த வற்புறுத்தியதால், 21.4.2014-ம் தேதி அசல் ரூ.26 ஆயிரத்திற்கு வட்டி ரூ.17,159 சேர்த்து ரூ.43,159 செலுத்தி நகையை மீட்டுள்ளார்.

தனியார் நிறுவனம் அதிகப்படியான வட்டியை வசூல் செய்து, தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் அதற்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடும், பண கஷ்டத்திற்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடும், வழக்குச் செலவிற்கு ரூ.4 ஆயிரமும் கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி வ.பாலசுந்தரகுமார், உறுப்பினர்கள் ச.சங்கர், ச.கற்பகச்செல்வி ஆகியோர் அளித்த தீர்ப்பு விவரம்:தனியார் நிறுவனம் அதிகமாகப் பெற்ற வட்டித் தொகை ரூ.10,339-யை உத்தரவு பிறப்பித்த தேதியிலிருந்து 1 மாதத்திற்குள் கோவிந்தராஜூக்கு திருப்பித் தர வேண்டும்.

தவறினால் பணம் வசூலாகும் வரை 6 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும். மன உளைச்சலுக்கு ரூ.5 ஆயிரமும், வழக்கு செலவிற்கு ரூ.3 ஆயிரமும் நஷ்டஈடாக வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.