அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மாணவர் தரம் உயர ஆசிரியர் தரம் உயர வேண்டும்

மாணவர்களின் தரம் உயர ஆசிரியர்கள் தரம் உயர வேண்டும் என்றும், அதற்கான பயிற்சிகளை அண்ணா பல்கலைக்கழகம் பேராசிரியர்களுக்கு வழங்கி வருகிறது என்றும் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் பயிற்சி மைய இயக்குநர் டாக்டர் மோகன் கூறினார்.

News image
Updated On :26 நவம்பர் 2015, 3:39 pm

கோ.ஜெயக்குமார்

மாணவர்களின் தரம் உயர ஆசிரியர்கள் தரம் உயர வேண்டும் என்றும், அதற்கான பயிற்சிகளை அண்ணா பல்கலைக்கழகம் பேராசிரியர்களுக்கு வழங்கி வருகிறது என்றும் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் பயிற்சி மைய இயக்குநர் டாக்டர் மோகன் கூறினார்.

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பேராசிரியர்களுக்கான 7 நாள் பயிற்சி நடைபெற்றது. பயிற்சி நிறைவு நாள் நிகழ்ச்சி, கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில், இயக்குநர் டாக்டர் சசி ஆனந்த் முன்னிலையில் நடைபெற்றது.

முதல்வர் சுப்புராஜ் வரவேற்றார். பல்கலைக்கழக கணினித் துறைத் தலைவர் தீபலட்சுமி கருத்துரையாற்றினார்.

அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் பயிற்சி மைய இயக்குநர் டாக்டர் மோகன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

மாணவர்கள் வகுப்பறையை விருப்பமுடன், ஆர்வமுடன் கவனிக்கும் அளவிற்கு ஆசிரியர்கள் வகுப்பிற்கு தகுந்த பயிற்சியுடன் செல்ல வேண்டும். ஆசிரியர்கள் வகுப்பு எடுக்கும்போது எந்த கர்வமும் கொள்ளக் கூடாது. மாணவர்கள் வகுப்பை விருப்பத்துடன் அனுபவிக்கும் விதத்தில் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க வேண்டும். ஆசிரியர்கள் திட்டமிட்டு பயிற்சியுடன் வகுப்பறைக்குச் சென்றால்தான், சிறந்த கல்வித் தரத்தைத் தர இயலும் என்றார் அவர்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பிருந்தா, ராஜ்குமார் ஆகியோர் செய்திருந்தனர். தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் பாக்கியலட்சுமி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.