இளம் பெண்ணை வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணை வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தார்.


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணை வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் இன்று கைது செய்தார். பாதிக்கப்பட்ட பெண் விஷம் குடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வத்திராயிருப்பு அருகேயுள்ள மாத்தூரைச் சேர்ந்தவர் சேகர் மனைவி பூமாரி (30). இவர் சனிக்கிழமை வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது இதே இடத்தைச் சேர்ந்த ச.கனகராஜ் (40) என்பவர் அங்கு வந்துள்ளாளர்.
பூமாரியைப் பார்த்து நாளைக்கு வா, ஜாலியாக இருந்து வரலாம் என்று கூறியுள்ளார். பூமாரி, கணவரிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.
இதனைக் கேட்ட கனகராஜ், அவரை ஆபாசமாகப் பேசி, நீ உயிரோடு இருந்துவிடவாயா? உன்னை உயிரோடு எரித்துக் கொன்றுவிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.
இதனால் மனஉளைச்சல் அடைந்த பூமாரி விஷம் குடித்துள்ளார். இதனை அறிந்து அருகில் உள்ளவர்கள் அவரை வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து பூமாரி, வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கனகராஜைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...