மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் 13-ல் தேதி முதல் நவராத்திரி விழா 

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் 13-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
Published on
Updated on
1 min read

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் 13-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி சிறப்பு பூஜைகளும், தினந்தோறும் மாலை 6.50 மணி முதல் 8.15 மணி வரை இசைக் கச்சேரி, நாட்டிய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் நோட்டு, புத்தகங்களை  கோயி்லில் பூஜையில் வைத்து வழிபட 20-ஆம் தேதி மாலை 6 மணிக்குள் கட்டி எடுத்து வரவேண்டும்.23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விஜயதசமி (வித்யாரம்பம்) விழா நடைபெறுகிறது

காலை கணபதி ஹோமம், காலை பூஜைகள் முடிந்தவுடன் காலை 7 மணிக்கு சரஸ்வதி பூஜை நடைபெறும்.இதைத் தொடர்ந்து பகல் 11 மணி வரை நடைபெறும் வித்யரம்பத்தில் குழந்தைகளின் நாவில் தங்க மோதிரத்தால் ஓம் என்கிற முதல் அக்ஷரத்தை நம்பூதிரிகள் எழுதி விரல்களைப் பற்றி அரிசியில்  (ஹரி ஸ்ரீ கணபதயே நமஹ) எழுத்துக்களை எழுதி பயிற்றுவிப்பார்கள்.

இந்த விழாவில் பங்கேற்ற வரும் பெற்றோர் தட்டு கொண்டு வர வேண்டும் கோயிலின் சார்பில் இலவசமாகக் கரும்பலகை, எழுதுகோல், அ,ஆ,இ.ஈ எழுத்துக்கள் அடங்கிய எண்கள் அடங்கிய அக்ஷர அட்டை வழங்கப்படும்.

பின்னர் ஏற்கனவே பூஜையில் வைத்து வழிபட்ட நோட்டு புத்தகங்கள் மாணவர்களிடம் வழங்கப்படும்.வித்யாரம்பத்தில் பங்கேற்க பெற்றோர்கள் முன்பதிவு செய்து கொள்ளுமாறு மேலும் தகவல்களுக்கு 044-28171197, 2817, 2197 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கோயில் நிர்வாக அதிகாரி அனிஷ் குமார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com