அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

விருதுநகருக்கு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் நவ.4-ல் வருகை

விருதுநகர்.விருதுநகர் மாவட்டத்திற்கு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பேராயர் டாக்டர் எம்.பிரகாஷ் நவம்பர் 4-ம் தேதி வருகிறார். என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :31 அக்டோபர் 2015, 7:31 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர்.விருதுநகர் மாவட்டத்திற்கு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பேராயர் டாக்டர் எம்.பிரகாஷ் நவம்பர் 4-ம் தேதி வருகிறார். என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பேராாயர் டாக்டர் எம்.பிரகாஷ் மற்றும் ஆணையக் குழு உறுப்பினர்கள் நவம்பர் 4-ம் தேதி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகிறார்கள். அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை அவர் சந்திக்கிறார்.

அப்போது சிறுபான்மையினத்தினருக்கு தமிழக அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, கருத்துக்கள் கேட்டறியப்படும். அப்போது சிறுபான்மையின கல்வி நிறுவன பிரதிநிதிகள், சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையினர் மேம்பாட்டிற்கு தக்க ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்றும் ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.