அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

சமுக நலத்துறையில் பெண்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

சமூக நலத்துறையில் பெண்களுக்காக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தெரிவித்தார்.

News image
Updated On :3 செப்டம்பர் 2015, 1:43 pm

சமூக நலத்துறையில் பெண்களுக்காக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்ட சமூக நலத்துறையும்-தொண்டு நிறுவனங்களும் இணைந்து   இளம் தொழிலாளர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களை தடுக்கும் திட்டத்தின் தொடக்க  விழா இன்று தனியார் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு திருச்சுழி ஸ்பீச் தொண்டு நிறுவனத்தின் நிதி மேலாளர் செல்வம் வரவேற்புரை வழங்கினார். ஸ்ரீவில்லிபுத்தூர் டெஸ்ட் மையத்தின் திட்ட இயக்குநர் ஜோசப்ராஜ் இளம் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் மற்றும் வளரினம் பெண்களின் நிலை குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.

இவ்விழாவில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ஐ.பாண்டியம்மாள் பங்கேற்று பேசுகையில், குழந்தைகள் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டும், வளர் இளம் பெண்கள் குறித்து அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்தல், அதோடு மாதந்தோறும் நடைமுறை திறன் வளர்ப்பு கல்வி, வாழ்க்கை கல்வி ஆகியவை குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் பருவம் அடைந்ததும் திருமணம் செய்து கொடுத்தால் நல்லது என்கிற மனநிலையில் பெற்றோர்கள் உள்ளனர். எனவே அந்நிலையை அனைவரும் மாற்றிக்கொள்ள வேண்டும். இம்மாவட்டத்தில் கடந்தாண்டு மட்டும் 93 சிறுமி திருமணங்களும், இதுவரையில் நிகழாண்டில் 70ம் நடந்துள்ளது. இதுபோன்றவைகளை தடுக்க சமூக நலத்துறையால்  செயல்படுத்தப்படும் திட்டங்களை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

மாவட்ட நன்னடத்தை அலுவலர், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன் கூறுகையில், மாநில குழந்தைகளின் ஆணையம் சார்பில் 32 மாவட்டங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பு அலகுகளை ஏற்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பிற்கான 20 சட்டங்களையும் நிறைவேற்றி வருகின்றனர். வளர் இளம் பெண்களின் நிலை, குடும்ப வறுமை, சுமங்கலித் திட்டம், குத்தகை தொழிலளர், பாலியல் பலாத்காரம் போன்ற குழந்தைகள் பாதுகாப்புக்கு எதிரான காரணிகளால் பாதிக்கப்படுகின்றனர். அதனால் பாதுகாப்பை உறுதி செய்யவும், சுயமரியாதையை மேம்படுத்தும் வகையில் பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்கும் வகையில் வளர் இளம் தொழிலாளர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களை தடுக்கும் வகையில் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.