பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டம்: புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தில் இன்று தொடக்கம்
அஞ்சல் துறை சார்பில் புதுவை அஞ்சல் கோட்டத்தில் பொன்மகன் பொதுவைப்பு திட்டம் இன்று காலை தொடங்கப்பட்டுள்ளது.

அஞ்சல் துறை சார்பில் புதுவை அஞ்சல் கோட்டத்தில் பொன்மகன் பொதுவைப்பு திட்டம் இன்று காலை தொடங்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு செல்வமகள் சேமிப்புக் கணக்குத் திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்தது. இத்திட்டத்தில் தமிழகத்தில் மட்டுமே 10.6 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. புதுச்சேரி கோட்டத்தில் மட்டும் 51 ஆயிரம் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆண் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டமாக பொன்மகன் பொதுவைப்பு நிதித் திட்டம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன்கீழ் 10 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் காப்பாளர் மூலமும், பத்து வயதுக்கு மேற்பட்டோர் தாங்களாகவோ கணக்கைத் தொடக்கலாம். கணக்கை தொடங்க வயது வரம்பு இல்லை. கணக்கு தொடங்கியது முதல் 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்தலாம்.
ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சமாக ரூ.500-ம், அதிகப்பட்சமாக ரூ.1.5 லட்சமும் சேமிக்க முடியும்.
இத்திட்டத்தின் கீழ் செலுத்தும் தொகைக்கு 80-சி கீழ் வருமான வரி விலக்கு உண்டு. இதற்கான வட்டி விகிதம் 8.7 சதவீதம் கூட்டு வட்டியாகும். இத்திட்டம் தொடங்கி 3ஆவது நிதியாண்டில் கடன் வசதியும், 7-வது நிதியாண்டில் 50 சதவீதம் தொகையை பெறும் வசதியும் உண்டு. 15 ஆண்டுகள் முடிந்த பிறகு கணக்கை முடித்துக் கொள்ளலாம்.
இன்று காலை புதுச்சேரி தலைமை அஞ்சலகம், அரபிந்தோ ஆசிரமம் அஞ்சலகத்தில் பொன்மகன் பொதுவைப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

