வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்தல் ஆகியவற்றை
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்தல் ஆகியவற்றை இன்று முதல் வாக்குச்சாவடி மையத்திலேயே மேற்கொள்ளலாம் என ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருவாரூர், திருத்துறைப்பூண்டி (தனி), மன்னார்குடி, நன்னிலம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 2016 ஆம் ஆண்டுக்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படுகிறது.
இந்த பட்டியல் திருவாரூர் மற்றும் மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் செவ்வாய்க்கிழமை முதல் பார்வைக்கு வைக்கப்படும்.தவிர, செப். 19, 30 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்திலும் வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
வரும் ஜனவரி 1-ம் தேதியன்று 18 வயது நிரம்பும் வாக்காளர்கள் தங்களது பெயர்களை படிவம் 6ஐ இந்த அலுவலகங்களில் நிரப்பிக் கொடுத்து சேர்த்துக் கொள்ளலாம். பட்டியலில் உள்ள திருத்தங்களை மேற்கொள்ள படிவம் 8, தொகுதிக்குள் இடம் மாற்றத்துக்கு படிவம் 8ஏ, இறந்தவரின் பெயரை நீக்க படிவம் 7 ஆகியவற்றை அளிக்க வேண்டும்.
இந்தப் பணி வரும் செப். 15 முதல் அக். 14 வரை நடைபெறும். மேலும், செப். 20 மற்றும் அக்டோபர் 4 ஆகிய இரு நாள்கள் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படும். இவற்றிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்ளலாம். இணையதளத்திலும் இதே திருத்தப் பணிகளை மேற்கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

