சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பாசனக் கால்வாய்களை சீரமைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் விவசாயிகள் கோரிக்கை

சேரன்மகாதேவியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினிடம் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் பாசனக் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

News image
Updated On :22 செப்டம்பர் 2015, 7:27 am

ஷேக் அப்துல்காதர்

சேரன்மகாதேவியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினிடம் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் பாசனக் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

நமக்கு நாமே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை பகல் 12 மணியளவில் சேரன்மகாதேவி வருகை தந்தார். அங்குள்ள ஹோட்டலில் விவசாயிகளை ஸ்டாலின் சந்தித்தார். விவசாயிகளுடன் டீ குடித்த ஸ்டாலின் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகமான ஏக்கரில் பாசனம் கொண்ட கன்னடியன் கால்வாயில் முறையாக விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதில்லை. பாசனக் கால்வாய்களில் மடைகள் சேதமடைந்துள்ளன. இதனால் வயலுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் உள்ளது.

ஆகவே பாசனக் கால்வாய்களை முழுமையாக சீரமைத்து விவசாயத்தை உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஸ்டாலின், கல்லிடைக்குறிச்சிக்கு வந்த ஸ்டாலினுக்கு பேரூராட்சி மன்றம் அருகில் நகர செயலர் க. இசக்கிபாண்டியன் தலைமையில் திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.

இதனை தொடர்ந்து அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் ஆர்ச்சில் இருந்து ஸ்கூட்டி மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து பயணித்த ஸ்டாலின், பூக்கடை சந்திப்பு வழியாக கோவில்குளம் சென்று அங்கு விவசாயிகளை சந்தித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.