விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கலசலிங்கம் பல்கலை.யில் வீட்டு உபயோகப் பொருள் உற்பத்தி கருத்தரங்கு

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வீட்டு உபயோகப் பொருள் உற்பத்தி கருத்தரங்கு இரு நாட்கள் நடைபெற்றது.

News image
Updated On :26 செப்டம்பர் 2015, 3:59 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வீட்டு உபயோகப் பொருள் உற்பத்தி கருத்தரங்கு இரு நாட்கள் நடைபெற்றது.

கருத்தரங்கை வேந்தர் க.ஸ்ரீதரன் முன்னிலையில், துணை வேந்தர் ச.சரவணசங்கர் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இயந்திரவியல் துறை பேராசிரியர் டாக்டர் கே.ஜெயகிருஷ்ணா வரவேற்றார். துறைத் தலைவர் டாக்டர் வினோலின் ஜேப்ஸ் பயிற்சி கருத்தரங்கு குறித்து விளக்கினார். துணைப் பதிவாளர் பி.ஜி.குருசாமிபாண்டியன் வரவேற்றார்.

பெங்களூரு, குளோபர் 3டி லேப்ஸ் இயக்குநர் கோபால் கிருஷ்ணா மற்றும் ரெயின்ஸா நிறுவனத்தின் உற்பத்தி மேலாளர் ஜி.தங்கமணி ஆகியோர் புதிய மாதிரி இயந்திரம் ஒன்றினைக் கொண்டுவந்து பயிற்சி அளித்தனர்.இந்த இயந்திரத்தில் தேவையான பொருளின் 3டி படம் எடுத்து கணினியில் செலுத்த வேண்டும்.

இயந்திரத்தை ஒரு மேஜையில் பொறுத்த வேண்டும். இயந்திரத்தை ஆன் செய்த உடன், கணினி அதில் உள்ள படத்திற்ககேற்ப அளவெடுத்து பல்வேறு முறைகளில் மூலப்பொருளை உட்படுத்தி இயந்திரம் சில மணித்துளியில் தேவையான பொருளை தேவையான வடிவத்தில் தருகிறது என்று செயல் விளக்கம் செய்து காட்டினர். மிக்ஸி, கிரைண்டர் பாகம் திடீரென தேய்ந்து போனால் உடனே இந்த இயந்திரத்தின் மூலம் செய்துவிடலாம்.

மேலும் பெரிய தொழிற்சாலைகளில், பெரிய பொருள்களை உற்பத்தி செய்ய ஆளில்லாத பெரிய மிஷின்கள் தயாரித்துள்ளதாக ரெயின்ஸா நிறுவனத்தின் உற்பத்தி மேலாளர் தங்கமணி கூறினார்.
பயிற்சியில் இயந்திரவியல், பயோடெக்னாலஜி துறைகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழை பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் வழங்கினார். பேராசிரியர் அரவிந்த்ராஜ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.