தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

விவசாய சங்க கூட்டமைப்பினர் சாலை மறியல்: 7 பெண்கள் உள்பட 102 பேர் கைது

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி கர்நாடகம் தமிழகத்துக்குரிய தண்ணீரை திறந்து விட வேண்டும்.

News image
Updated On :29 செப்டம்பர் 2015, 10:02 am

பார்திபன்

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி கர்நாடகம் தமிழகத்துக்குரிய தண்ணீரை திறந்து விட வேண்டும். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழு போன்றவற்றை உடனடியாக  அமைக்க வேண்டும்.

தமிழக மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. இதில் மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கச் செயலர் சி. பக்கிரிசாமி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல துவரங்குறிச்சியில் ஏ. கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) தலைமையில் 11 பேர், கரம்பயத்தில் கலியபெருமாள் (இந்திய கம்யூனிஸ்ட்) தலைமையில் 17 பேர் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாயினர்.

மதுக்கூரில் விவசாய சங்க ஒன்றியச் செயலர் வேதாசலம் தலைமையில் 38 பேரும், அதிராம்பட்டினத்தில் விவசாய சங்க ஒன்றியப் பொருளாளர் பன்னீர்செல்வம் தலைமையில் 4 பெண்கள் உள்பட 22 பேரும் சாலை மறியலில் பங்கேற்று கைதாயினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.