மதுவிலக்கை அமல்படுத்துவது தொடர்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்தை கருணாநிதி கூறி வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
கருணாநிதி முதலில் மதுவிலக்கை கொண்டு வருவதாகக் கூறினார். அதன்பின்பு முதல் நாள் முதல் கையெழுத்து மதுவிலக்குக்குதான் என்றார். திமுக தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
மயிலாடுதுறையில் நடைபெற்ற கூட்டத்தில் முதல் நாளே மதுவிலக்கு ஆணையில் கையெழுத்திடுவேன் என்று பேசினார். அங்கிருந்து தஞ்சாவூர் வருவதற்குள் நிலைப்பாட்டை மாற்றி சட்டம் இயற்றிதான் மதுவிலக்கை கொண்டு வருவோம். ஆட்சிக்கு வந்த 2-ஆம் நாளிலேயே சட்டம் இயற்றுவோம் என்றும் விளக்கமளித்திருக்கிறார்.
மதுவிலக்கை அமல்படுத்தப் போவதாக கருணாநிதி திரும்பத் திரும்பக் கூறியும் மக்கள் அதை நம்பத் தயாராக இல்லை. திமுகவினர் யாரும் மது விற்பனை செய்ததும் கிடையாது என்று கூறியிருக்கிறார். திமுக வேட்பாளர்களில் பலர் மது ஆலை உரிமையாளர்கள்தான். மதுவுடன் தொடர்புடைய திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட பாமக தயாராக உள்ளது.
கடந்த 40 ஆண்டுகளாக மதுவைக் கொடுத்து மக்களைக் கெடுத்த அதிமுகவும், திமுகவும் தேர்தலில் படுதோல்வி அடைவது உறுதி என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


