காஞ்சிபுரம் மாநாடு: தொண்டர்களுக்கு விஜயகாந்த் அழைப்பு
காஞ்சிபுரத்தில் பிப்ரவரி 20-ஆம் தேதி நடைபெறும் மாநாட்டுக்கு பெருமளவில் தொண்டர்களுக்கு வரவேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.


காஞ்சிபுரத்தில் பிப்ரவரி 20-ஆம் தேதி நடைபெறும் மாநாட்டுக்கு பெருமளவில் தொண்டர்களுக்கு வரவேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தேமுதிகவின் மாநாடு பிப்ரவரி 20-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளது. தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் சக்தி தேமுதிக என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.
11 ஆண்டுகளாக தேமுதிக பல்வேறு சோதனைகளைச் சந்தித்தாலும், அதைச் சாதனைகளாக மாற்றி, தேமுதிகவை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றதில் தொண்டர்களின் பங்கு மகத்தானதாகும்.
தமிழகத்தில் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது. வறுமையும், வேலையில்லா திண்டாட்டமும் பெருகியுள்ளது.
சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது. விவசாயமும் தொழிலும் நலிவடைந்து போய்விட்டது. இந்த நிலையில் தமிழகத்தை மீட்க வேண்டும். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
அதற்கு அடித்தளமிடும் வகையில் தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு அமைய வேண்டும். எனவே, இந்த மாநாடு வரலாற்றில் இடம்பெறும் வகையில் தொண்டர்கள் திரள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...