டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

எழுத்துத் தேர்வின் அடிப்படையில் ஆய்வக உதவியாளர் நியமனம்: மு.க.ஸ்டாலின்

எழுத்துத் தேர்வின் அடிப்படையில் ஆய்வக உதவியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:37 pm

அரவிந்தன்

எழுத்துத் தேர்வின் அடிப்படையில் ஆய்வக உதவியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-

 தமிழகம் முழுவதும் உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு 2015-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. அதில் 8 லட்சம் பேர் பங்கேற்றனர்.

 எழுத்துத்தேர்வில் பங்கேற்றவர்களில் ஒரு பதவிக்கு 5 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 25 மதிப்பெண்ணுக்கு நேர்காணல் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. 

 இதனால் 150 மதிப்பெண்ணுக்கு எழுதப்பட்ட எழுத்துத் தேர்வுக்கு மதிப்பற்றுப் போகுமோ என்று தேர்வெழுதியோர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இதுபோன்ற பணிகளுக்கு நேர்காணல் மூலம் நியமனம் செய்வது முறைகேட்டுக்கு வழிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

 எனினும் எழுத்துத் தேர்வு நடைபெற்று ஓராண்டாக்கு மேலாகியும் அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை. பணி நியமனம் செய்யாமல் காலம் தாழ்த்தி வருவது இளைஞர்களின் எதிர்காலத்தை வீணடிக்கும் செயலாகும்.

 எனவே, நீதிமன்ற உத்தரவினை ஏற்று, எழுத்துத் தேர்வின் அடிப்படையில் பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.