பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

கூடங்குளத்திலிருந்து தமிழகத்துக்குக் கூடுதல் மின்சாரம்  ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

புதியதாக செயல்பாட்டுக்கு வந்துள்ள கூடங்குளம் 2-ஆவது அணு உலையில் உற்பத்தி செய்யப்படும்

Updated On :11 ஜூலை 2016, 1:02 pm

புதியதாக செயல்பாட்டுக்கு வந்துள்ள கூடங்குளம் 2-ஆவது அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் பெரும்பாலான பங்கை தமிழகத்துக்கே வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

 இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-

 இந்திய - ரஷ்ய நாடுகளின் கூட்டு முயற்சியால் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் அணுஉலை மின்உற்பத்தியை தொடங்கியது. அதிலிருந்து 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, 562 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு வழங்கப்படுகிறது.

 தற்போது புதியதாக உற்பத்தியைத் தொடங்கியுள்ள 2-ஆவது அணு உலையின் உற்பத்தி 1,000 மெகாவாட்டை எட்டும்போது தமிழகத்துக்கு 562 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.

 இருப்பினும் தமிழகத்தின் பயன்பாட்டுக்கு மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், கூடங்குளம் 2-ஆவது அணு உலையில் உற்பத்திó செய்யப்படும் மின்சாரத்தில் பெரும்பாலான பங்கை தமிழகத்துக்கு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.