பொதுச் சேவைகளின் எண்ணிக்கை 300-ஆக உயர்த்தப்படும் என்றும், லோக் ஆயுக்த அமைக்க உருவாக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது:-
நிர்வாகத்தின் வெளிப்படைத் தன்மையையும், பொறுப்புடைமையையும் அதிகரிக்க அரசு எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளில் பொதுச் சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே கொண்டு சேர்க்கும் அம்மா திட்டமும், மக்களின் குறைகளை 24 மணி நேரமும் தீர்க்கவல்ல அமைக்கப்பட்டுள்ள அம்மா அழைப்பு மையமும் ஆகும். மாநில முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 10,532 இ-சேவை மையங்களும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இ-சேவை மையங்களின் மூலம், தற்போது அளிக்கப்பட்டு வரும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுச் சேவைகளின் எண்ணிக்கை, நடப்பு ஆண்டில் 300 வரை உயர்த்தப்படும்.
லோக் ஆயுக்த அமைப்பு: தற்போது அமைக்க திட்டமிடப்பட்டுள்ள லோக் ஆயுக்த அமைப்பு, தூய நிர்வாகத்தையும், பொறுப்புடைமையையும் உறுதி செய்து நிர்வாகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

