விழுப்புரம் அருகே உள்ள சாலாமேடு பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் மகன் ஒருவரை முன்விரோதம் காரணமாக சிலர் வியாழக்கிழமை இரவு அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
விழுப்புரம் சாலாமேடு இ.சி. காலனியைச் சேர்ந்த சிவலிங்கம்(50). அதிமுக பகுதி கிளைச் செயலாளர். இவரது மகன் செல்வக்குமார்(36). அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். வியாழக்கிழமை அந்த பகுதியில் பாலு என்பவர் இறப்பு நிகழ்ச்சியில் நடைபெற்றது. இதையொட்டி, அங்கு இருதரப்பினர் இடையே பிரச்னை ஏற்பட்டதாம். அப்போது, செல்வக்குமார் சென்று இருதரப்பினரையும் விளக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர், செல்வக்குமார் வீட்டுக்கு வந்துவிட்டார்.
இந்த நிலையில் உணவகத்துக்கு தேவையான பொருள்கள் வாங்கி அதே பகுதியில் உள்ள கடைக்கு தனது குழந்தைகள் இரண்டு பேரை அழைத்துக்கொண்டு செல்வக்குமார் இரவு 9.30 மணி அளவில் கடைக்கு வந்தார். அப்போது, அங்கு வந்த சிலர் செல்வக்குமாரை சரமாரியாக அரிவாளால் தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் தாக்கிவிட்டு தப்பியோடினர். இதில் ரத்தவெள்ளத்தில் செல்வக்குமார் அங்கேயே சரிந்து விழுந்தார்.
இதையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்ட செல்வக்குமார் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இது குறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த விழுப்புரம் தாலுகா போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால், அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெள்ளிப் பதக்கம் வென்ற ஞானேஸ்வரி - புகைப்படங்கள்

காமன்வெல்த் போட்டி: பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஞானேஸ்வரி யாதவ்!

இந்தியாவுக்கு 6 வது பதக்கம்! பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் விந்தியாராணி தேவி!

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


