பெண்கள் தன்நம்பிக்கையுடன் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி பெறலாம்: நடிகை ரோகிணி

பெண்கள் தன்நம்பிக்கையுடன் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி பெறலாம் என திரைப்பட நடிக்கை ரோகிணி கூறினார்.
பெண்கள் தன்நம்பிக்கையுடன் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி பெறலாம்: நடிகை ரோகிணி

பெண்கள் தன்நம்பிக்கையுடன் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி பெறலாம் என திரைப்பட நடிக்கை ரோகிணி கூறினார்.

சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியும், ஜேசிஐடைனமிக் சங்கமும் இணைந்து இன்று கல்லூரியில் மகளிர் தினவிழா விழாவினை நடத்தின.

தற்போது பெண்கள் ராணுவம், கடல்படை உள்ளிட்ட கடினமான துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு பெண் இனத்திற்கு பெருமை சேர்த்து வருகிறார்கள். உயர் கல்வி படித்துவிட்டு பல பெண்கள் குடும்பம், வீடு என தங்களது எல்லையை சுருக்கிகொண்டு விடுகிறார்கள்.

வெறும் பெருமைக்கு உயர் கல்வி கற்காமல், கற்ற கல்வியை நாட்டிற்கு பயன்படி செயல்பட வேண்டும். சில ஆண்கள் பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது என தடைவிதிக்கிறார்கள்.

கிராமங்களில் சென்று பாருங்கள், வயல் வேலைகளை செய்ய பெண்கள் இல்லையேற்றால் என்னவாகும்.

நகர் புறங்களில் வேலை வாய்ப்பு உள்ளது. வீட்டிருந்தபடியே கைவினைப்பொருள்கள், உணவுப்பொருள்கள் தயாரிக்கும் பெண்கள் தங்களது பொருளாதார தேவையை பூர்த்தி செய்வதோடு, திருமணம் உள்ளிட்ட பெரும் செலவுகளுக்கும் தங்கள் சம்பாதித்த பணத்தை செலவிடுகிறார்கள். இந்த வேலையை பெண்கள் செய்ய இயலாது என சில பெண்களே நினைத்து குறுகிய வட்டத்தினுள் இருந்து விடுகிறார்கள்.

முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை. நம்மால் முடியும் என்ற எண்ணம் பெண்களுக்கு வேண்டும். சமையல் செய்தாலும், அலுவக வேலை செய்தாலும், சொந்தத்தொழில் செய்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் செய்தால் வெற்றி பெறலாம். வாசிக்கும் பழக்கம் பெண்களுக்கு அதிகமாக இருக்க வேண்டும். டி.வி. நிகழ்ச்சிகள் பொழுது போக்கு என்றால், வாசிக்கும் பழக்கம் வாழ்கைக்கு உதவும்.

பெண்கள் தன்நம்பிக்கையுடன் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்றார் ரோகிணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com