தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருச்சியில் பில்டிங், பட்டரை உரிமையாளர் கழுத்து அறுத்துக் கொலை

திருச்சி காஜாமலை அருகே காளியம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் காஜா உஷேன் (35). இவர் அதே பகுதியில் வெல்டிங் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலைச் செய்து வந்தார்.

News image
Updated On :24 மார்ச் 2016, 7:16 am

கவியழகன்

திருச்சி காஜாமலை அருகே காளியம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் காஜா உஷேன் (35). இவர் அதே பகுதியில் வெல்டிங் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலைச் செய்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் இவர் காணாமல் போயிருந்தார். சுற்றும், முற்றும் தேடிய அவரின் மனைவி குர்ஷித் பானு திருச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து காஜா உஷேனை தேடி வந்தனர்.

இன்று காலை திருச்சி காவிரியாற்று அருகே மொயாமரி மயானத்தில் கழுத்து அறுத்த நிலையில் சடலம் ஒன்று கண்டெக்கப்பட்டது. அந்தச் சடலம் காஜா உஷேனின் சடலம் தான் என்று உறுதிசெய்யப்பட்டது. இது தொடர்பாக திருச்சி கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்திற்கு இடமாக 2 பேரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.