எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பொன்னமராவதியில் பிரதமர் மோடியின் நடவடிக்கைகளை விளக்கி பாஜகவினர் பிரச்சாரம்

பிரதமர் மோடி 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்துள்ளதின் நோக்கத்தை விளக்கி பொன்னமராவதியில் பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொண்டனர். 

News image
Updated On :9 நவம்பர் 2016, 12:38 pm

அருசிவபாலன்

பொன்னமராவதி

பிரதமர் மோடி 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்துள்ளதின் நோக்கத்தை விளக்கி பொன்னமராவதியில் பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

பொன்னமராவதி பேருந்துநிலையம், அண்ணாசாலை, புதுப்பட்டி, நாட்டுக்கல், வலையபட்டி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வாகனப்பிரச்சாரம் மேற்கொண்டும், பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கியும் பிரதமர் மோடியின் நடவடிக்கையின் காரணங்களை விளக்கினர். நாட்டு நலனில் அக்கறை கொண்ட பாரதப்பிரதமர் நரேந்திரமோடி கருப்புப்பணத்தை ஒழிக்கவும், தீவிரவாதத்தை கட்டுப்படுத்தவும் விதமாக 500,1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்துள்ளார்.

எனவே பொதுமக்கள் பீதியடையவேண்டாம். மேலும் தங்களிடம் உள்ள நோட்டுக்களை டிச.30ம் தேதிக்குள் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். வர்த்தகர்கள் இந்நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளித்து செயல்படவேண்டும் என பிரச்சாரத்தில் அறிவுருத்தினர்.

மேலும் 500 ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்த பொதுமக்களுக்கு, தங்களிடமிருந்த நூறு ரூபாய் நோட்டுக்களை வழங்கினர். ஒன்றியத்தலைவர் கார்த்திக், மாநில செயற்குழு உறுப்பினர் பி.பாஸ்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.குமரன், ஒன்றிய இளைஞரணி தலைவர் ராஜா, நகரத்தலைவர் சேதுமலையாண்டி, ஒன்றிய இளைஞரணி பொருளர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.