புதுச்சேரியில் தொடங்கியது பருவமழை: மக்கள் மகிழ்ச்சி
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை பருவ மழை தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


புதுச்சேரி,
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை பருவ மழை தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
புதுச்சேரி, தமிழகத்தில் கடந்த 20ம் தேதியே வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனால் அதன்படி மழை பெய்யவில்லை.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலில் 800 கிலோ மீட்டருக்கு அப்பால் தோன்றிய குறைந்த தாழ்வு அழுத்த நிலையின் காரணமாக புதுச்சேரி தமிழகத்தில் கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் புயல் சின்னம் ஆந்திராவை நோக்கி சென்றதால் புதுச்சேரி, தமிழகத்தில் மழை பெய்யவில்லை. இந்நிலையில் 30-ம் தேதி முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
புதுச்சேரியிலும் பிற்பகல் முதல் மழை பெய்து வருகிறது. காலையில் இருந்து வானம் மேக மூட்டத்துடனேயே காணப்பட்டது. மேலும் குளிர்ந்து சீதோஷ்ன நிலையும் நிலவி வருகிறது.
கடந்த பல மாதங்களாக கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டிருந்த புதுச்சேரி மக்கள் தற்போது பருவ மழை பெய்யத் தொடங்கி உள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...