லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்ககு உரை: வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி இன்று  தில்லியில் நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: 

News image
Updated On :8 நவம்பர் 2016, 3:32 pm

புதுதில்லி

பிரதமர் நரேந்திர மோடி இன்று  தில்லியில் நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: 

நாட்டில் கருப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்க மத்திய அரசு வரலாற்று சிறப்பு மிக்க திடீர் முடிவை எடுத்துள்ளது. அதன்படி ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அரசு அழிக்க உள்ளதாகவும்,

எனவே இன்று அதாவது நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு 12 மணியுடன், அந்த நோட்டுக்கள் செல்லாது எனவும் அவர் தெரிவித்தார். அதேநேரம், அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் பெட்ரோல் நிலையங்களில் வரும் 11ம் தேதி நள்ளிரவு வரை நோட்டுக்கள் பெறப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை அனைத்து வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸ்களில் வரும் டிசம்பர் 30ம் தேதிக்கு முன்பாக கொடுத்து, புதிய வகை ரூபாய் நோட்டுக்களாக அவற்றை மாற்றிக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனவே மக்கள் தங்களிடமுள்ள 500 ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 30ம் தேதிக்குள் மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அதற்கு பதிலாக புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூ.500 மற்றும், ரூ.2000 முக மதிப்பிலான நோட்டுக்களை அரசு சப்ளை செய்ய உள்ளது. இது பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. எனவே கள்ள நோட்டு புழக்கத்தையும், பண பதுக்கலையும் தடுக்க முடியும் என கூறப்படுகிறது.

ரூ.2000 நோட்டுக்களில் அதிநவீன லேயர்கள் இருப்பதால் செயற்கைக்கோள் மூலமாக கூட அவற்றை கண்காணித்து பதுக்கலை தடுக்க முடியும் என்று ஒரு தகவல் உலவி வரும் நிலையில் பிரதமர் அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.