புதுச்சேரி: புதுவையில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த துணைநிலை ஆளுநர் தடையாக உள்ளார் என உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.
புதுவை கம்பன் அரங்கில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டப்பணிகள், குப்பைகள் தூர்வாருதல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதது.
அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். அமைச்சர் கந்தசாமி, அரசுக் கொறடா அனந்தராமன், எம்.எல்.ஏக்கள் அன்பழகன், பாஸ்கர், ஜெயமூர்த்தி, வையாபுரிமணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்துக்கு பின் அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அமைச்சரவைக்கு எதிராக மட்டும் இல்லாமல் மக்கள் பிரதிநிதிகள், மக்களுக்கு எதிராகவும் செயல்படுகிறார். குறிப்பாக மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தடையாக உள்ளார். இதனால் மாநிலத்தின் வளர்ச்சி தான் பாதிக்கப்படுகிறது.
கணேசன் தான் நகராட்சி ஆணையர்
சட்டப்பேரவைத் தலைவர் உத்தரவின்படி நகராட்சி ஆணையராக கணேசன் தான் செயல்படுவார். பணியாளர் நலத்துறை மூலம் தலைமைச் செயலாளர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்
பேரவைத் தலைவரின் உத்தரவை எவரும் மீற முடியாது. கணேசன் தான் நகராட்சி ஆணையராக நீடிப்பார்.
காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரசேகரன், ஒரு குறிப்பை கொண்டு வந்து தந்தால் அதை ஏற்கமுடியாது. உள்ளாட்சித் துறையை பொறுத்தவரை அமைச்சருக்கு முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது.
ஆளுநருக்கு 13 அம்சங்களில் தான் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது. அனைத்திலும் அவரால் தலையிடமுடியாது. தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும் உரிய அதிகாரம் உள்ளது. இதில் முதல்வர் உரிய முடடிவெடுப்பார் என்றார் நமச்சிவாயம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.