மதுக்கடைகளுக்காக சாலைகளின் வகைகள் மாற்றம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்
மதுக்கடைகளுக்காக சாலைகளின் வகைகளில் மாற்றியமைப்பதற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


மதுக்கடைகளுக்காக சாலைகளின் வகைகளில் மாற்றியமைப்பதற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும், அதைச்சுற்றி 500 மீóட்டர் தொலைவிலும் உள்ள மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.ஹேகர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு கூறியது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டு வருகின்றன.
ஆனால், தமிழகத்தில் மட்டும் மூடிய கடைகளை மீண்டும் அதே பகுதியில் உட்புறமாக உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி திறக்கப்படும் அவலம் ஏற்பட்டு, அதை எதிர்த்து மக்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த வழக்கில் முக்கியத் தீர்ப்பு வருவதற்கு பெரும் பங்காற்றிய வழக்குரைஞர் பாலு மூலம் ஒரு கடிதத்தை எனக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்தில், தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் போன்றவற்றை மாநகர சாலைகள், நகர சாலைகள், பெரிய மாவட்ட சாலைகள் என்று வகை மாற்றம் செய்து உச்சநீதிமன்ற தீர்ப்பை பிசுபிசுக்க வைக்கும் முயற்சியில் மத்திய அரசும், இங்குள்ள மாநில அரசும் ஈடுபடுவதாகவும் அதற்கு எதிராக திமுக சார்பில் குரல் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சாலை வகைகளை மாற்றியமைப்பது மதுக்கடைகளை திறப்பதை திமுக சார்பில் கண்டிக்கிறேன்.
மத்திய அரசும், மாநில அரசும் சாலைகளை வகை மாற்றம் செய்து மது வணிகர்களைக் காப்பாற்ற நினைக்காமல், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முழு மனதுடன் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பாமக வழக்குரைஞர் பாலு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...