புதுச்சேரி: நெடுஞ்சாலையில் அகற்றப்பட்ட மதுக்கடைகளை ஊருக்குள் கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்து ஆண்டியார்பாளையம் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதார் அட்டை , குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
உச்சநீதிமன்ற உத்தரவு படி மாநில நெடுஞ்சாலை , தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள மதுக்கடைகளை அகற்ற உத்தரவிட்டதையடுத்து , புதுச்சேரியில் உள்ள தேசிய , மாநில நெடுஞ்சாலை கடைகள் மூடப்பட்டது. இதில் திருபுவனை ஆண்டியார்பாளையம் பகுதியில் மாநில நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டது. இதனை அப்பகுதியில் உள்ள கிராமத்தின் உட்புறம் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
மேலும் ஆண்டியார்பாளையம் ஊருக்குள் கொண்டுவர முயற்சித்து வருவதை அறிந்த பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 100 க்கும் மேற்பட்ட ஆண்டியார்பாளையத்தை சார்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களின் ஆதார் அடையாள அட்டை , வாக்காளர் அடையாள அட்டை , குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அலுவலகத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் முறையிட்டதை அடுத்து அவர் மனு அளித்துவிட்டு செல்லுங்கள். இதன் மேல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததாக தெரிவித்தனர். மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவின் ரூ.8,000 கூப்பன் திட்டம் ஊழலுக்கு வழிவகுக்கும்: பாஜக!

சேலத்தில் பிரசாரத்தில் பங்கேற்ற ராமதாஸ் மேடையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு நாளை இயங்காது

கோவை சிறையில் கைதிகளுக்கான ரேஷன் பொருள்களை பதுக்கிவைத்தாகப் புகார்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

