தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அமெரிக்காவில் இந்திய மாணவர் மீது மர்ம நபர் துப்பாக்கிச்சூடு: ஆபத்தான நிலையில் சிகிச்சை

அமெரிக்காவின் சிகாகோ நகரில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் இந்தியாவை சேர்ந்த மாணவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான

News image
Updated On :10 டிசம்பர் 2017, 2:42 pm

DIN

ஹைதராபாத்: அமெரிக்காவின் சிகாகோ நகரில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் இந்தியாவை சேர்ந்த மாணவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் உபால் பகுதியை சேர்ந்தவர் முகமது அக்பர்(30). இவர் அமெரிக்காவின் இலினாய்ஸ் நகரில் உள்ள டெவ்ரி பல்கலையில் மாஸ்டர் ஆப் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் மற்றும் டெலிகம்யூனிகேசன்ஸ் படித்து வருகிறார். அவர் நேற்று சனிக்கிழமை காலை 8.45 மணியளவில் மர்ம நபர் சுட்டதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகிறார்.

Story image

இது தொடர்பாக அவரது தந்தை கூறுகையில், சிகாகோவில் உள்ள அல்பனி பூங்கா அருகே நிறுத்தப்பட்டிருந்த தனது காரை எடுக்க சென்ற போது அக்பரை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதாகவும், கன்னத்தில் குண்டு பட்டதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகனை பார்ப்பதற்காக அவரது குடும்பம் அமெரிக்கா செல்வதற்கு அவசர விசா வழங்க ஏற்பாடு செய்யுமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் இந்திய மென்பொறியாளர், மாணவர்கள் மீதான தாக்குதல் அதிகாரித்து வரும் நிலையில்,  இந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச், ஜூன் மாதத்தில் மட்டும் 3 இந்திய மென்பொறியாளர்கள் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.