
காபூல்: ஆப்கனின் நங்கர்ஹர் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் நகரில் நடந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சயின் போது குண்டு வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர்.14 பேர் காயமடைந்தனர். அங்கு மீட்பு பணி நடந்து வருகிறது.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாவட்ட நங்கர்ஹர் மாகாணத்தின் முன்னாள் மாவட்ட தலைவரான ஹஸ்கமேனாவின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியின் போது தற்கொலை படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர் என பொது சுகாதார இயக்குநர் நஜிபுல்லா தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்தவொரு தனிப்பட்ட இயக்கமோ அல்லது குழுவோ பொறுப்பேற்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.