ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஒகேனக்கல் குடிநீரை வீணாக்கினால் குற்றவியல் நடவடிக்கை: அமைச்சர்

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் வழங்கப்படும் குடிநீரை வீணாக்கினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்

Updated On :27 பிப்ரவரி 2017, 2:01 pm

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் வழங்கப்படும் குடிநீரை வீணாக்கினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடிநீர் விநியோகம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:  பருவமழைப் பொய்த்துப் போனதால் இந்த ஆண்டு குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது. எனவே, மாவட்டத்திலுள்ள 8 ஒன்றியங்களிலும் குடிநீóர் பற்றாக்குறை ஏற்படலாம் என கருதப்படும் பகுதிகளைக் கண்டறிந்து குறைகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. மோட்டார் பழுதுகள் நீக்கப்பட்டு வருகின்றன.

மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதி மற்றும் பொது நிதியில் இருந்து 246 குடிநீர்ப் பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மூலம் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் குடிநீரை குடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

குடிநீரை வீணாக்குவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர்த் திட்டக் குழாய்களை சேதப்படுத்துவோர் மற்றும் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொது சொத்துகளை சேதப்படுத்துவதைத் தடுக்கும் சட்டத்தின் கீழும் தண்டிக்கப்படுவார்கள் என்றார் அன்பழகன்.

  கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எம். காளிதாசன், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் விமலாதேவி, நகராட்சி ஆணையர் (பொ) குணாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.