புதுச்சேரி: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுச்சேரி சட்டப்பேரவையில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும். இதுதொடர்பாக சட்டம் இயற்றுவதற்கு அனுமதி கோரும் தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்திருந்தார். அதன் மீதான விவாதம் புதன்கிழமை நடைபெற்றது.
அன்பழகன்: மத்திய அரசு ஏற்கெனவே போட்டியிருந்த அறிவிக்கையை திரும்ப் பெற்று விட்டது. தமிழகத்திலும் ஜல்லிக்கட்டு தொடர்பாக சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது புதுச்சேரியில் இதற்கான தீர்மானம் தேவையா, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தப் போகிறீர்களா.
முதல்வர் நாராயணசாமி: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தீர்மானத்தை கொண்டு வந்துளளோம். புதுவையிலும் ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டம் இயற்ற அனுமதி கோரி மத்திய உள்துறைக்கு தீர்மானத்தை அனுப்புவோம். இது நிறைவேற்றப்பட்டால் புதுவையிலும் ஜல்லிக்கட்டு, ஏறு தழுவுதல் போன்றவை நடத்தலாம். மத்திய உள்துறை அனுப்பும் பதில் நமக்கு பதிவாக அமையும்.
அன்பழகன் தற்போது இத்தீர்மானம் நிறைவேற்றுவது கேலிக்குரியது. அமைச்சர் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன்: இத்தீர்மானம் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு நிறைவேற்றப்படுகிறது.
அமைச்சர் ஷாஜகான் -வருங்காலங்களில் எவரேனும் நீதிமன்றம் செல்ல வாய்ப்புள்ளது. அதனால்தான் சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கிறோம்.
இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு நாளை இயங்காது

கோவை சிறையில் கைதிகளுக்கான ரேஷன் பொருள்களை பதுக்கிவைத்தாகப் புகார்!

ஆலங்காயத்தில் பழச்சாறு தொழிற்சாலை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா்!

கீழ்வேளூா்: ரூ. 1.94 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

