/

குடியரசு துணை தலைவராக தேர்வானால் சிறப்பாக செயல்படுவேன்: வெங்கய்யா நாயுடு

குடியரசுத் துணைத் தலைவராக என்னை தேர்வு செய்ததற்கு பிரதமர் மோடி, பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா ..

News image
Updated On :18 ஜூலை 2017, 7:00 am

DIN

புதுதில்லி:  குடியரசுத் துணைத் தலைவராக என்னை தேர்வு செய்ததற்கு பிரதமர் மோடி, பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.

வேட்பு மனு தாக்கல் செய்த பின் பேசிய அவர் மேலும் கூறியதாவது: - குடியரசு துணை தலைவராக தேர்வானால் சிறப்பாக செயல்படுவேன். நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன். குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான மதிப்பு மரியாதையை காப்பேன்.

சாதாரண விவசாயக் குடும்பத்தில் இருந்து குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதை கெளரவமாக கருதுகிறேன். நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்தை காப்பேன். சிறுவயதில் எனது தாயை இழந்த நான் பா.ஜ.கவை எனது தாயாக கருதுக்கிறேன் என்று கூறினார்.

கட்சி, ஆட்சியில் பல பொறுப்புகள் வகித்துள்ளேன். என்னை குடியரசுத் துணைத் தலைவராக தேர்வு செய்த பிரதமர் மோடிக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.