பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.

Published On :29 ஜனவரி 2024, 10:02 pm IST

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பூமிப்பிராட்டியாம் ஸ்ரீஆண்டாளின் திருஅவதார தினமான ஆடிப்பூர நன்னாளைக் கொண்டாடும் விதமாக ஸ்ரீஆண்டாள் திருஆடிப்பூர பெருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டு இம் மாதம் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஆண்டாள் ரெங்கமன்னார் வெவ்வேறு வாகனங்களில் புறப்பாடு ஆகி வீதி உலா நடைபெறும். மாலையில் ஆடிப்பூர உற்சவ பந்தலில் பக்தி சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

சென்ற 23ஆம் தேதி ஸ்ரீபெரியாழ்வார் மங்களாசாசனம் நடைபெற்று, இரவு ஐந்து கெருட சேவை நடைபெற்றது. 7ஆம் திருநாளான 25ஆம் தேதி அருள்மிகு கிருஷ்ணன் திருக்கோவிலில் சயன சேவை நடைபெற்றது. இதில் ஸ்ரீஆண்டாள் திருமடியில் ஸ்ரீரெங்கமன்னார் சயனத் திருக்கோலத்தில் காட்சியளித்தார்.

Story image

பிறகு 9ஆம் திருநாளான 27ஆம் தேதி அதிகாலை ஏகாந்த திருமஞ்சனம் நடைபெற்று, தனித்தனி தோளுக்கினியான்களில் ஆண்டாள் ரெங்கமன்னார் திருத்தேர் எழுந்தருளல் நடைபெற்றது. முன்னதாக மதுரை அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் மற்றும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலிருந்து பிரசாதமாக வந்த பரிவட்டங்கள் ஸ்ரீஆண்டாளுக்கு சாற்றப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. தேரோட்டம் காலை 8.05 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அ.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா முத்தையா, வி.பி.எம்.எம். மகளிர் கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.பி.எம்.சங்கர், கோவில் தக்கார் கி.ரவிச்சந்திரன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.