புதுச்சேரி: புதுச்சேரிக்கு வந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை முன்னாள் முதல்வர் ரங்கசாமி மற்றும் அதிமுக எம்எல்.ஏக்கள் திங்கள்கிழமை நேரில் சந்தித்து குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கான ஆதரவை உறுதி செய்தனர்.
பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிகார் முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்கெனவே பிரதான எதிர்க்கட்சியான என்ஆர். காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. அதே போல் தமிழகத்தில் அதிமுகவின் 3 பிரிவினரும் அவருக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தேசிய தலைவர் அமித்ஷா 2 நாள் பயணமாக புதுவைக்கு வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவரை என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரங்கசாமி, அதன் எம்.பி. ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏக்கள் ஜெயபால், கோபிகா, சுகுமார் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர்.ஆளும் கட்சித் தரப்புடன் நெருக்கமாகக் காணப்படும் எம்.எல்.ஏக்கல் செல்வம், திருமுருகன், சந்திரபிரியங்கா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
அதே போல் அதிமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் அன்பழகன் தலைமையில் எம்.பி. கோகுலகிருஷ்ணன், எம்.எல்.ஏக்கள் வையாபுரி மணிகண்டன், பாஸ்கர் ஆகியோரும் சந்தித்துப் பேசினர். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு தங்கள் ஆதரவை உறுதி செய்தனர். அதைத்தொடர்ந்து அனைவரும் மதிய உணவு சாப்பிட்டனர்.
சந்திப்புக்கு பிறகு எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி கூறியசதாவது} குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை என்.ஆர்.காங்கிரஸ் ஆதரிக்கும் என்று தெரிவிóத்திருந்தோம். அதன் அடிப்படையில் புதுச்சேரி வந்துள்ள பாஜக தேசியத்தலைவரை சந்தித்து எங்கள் கட்சியின் எம்எல்ஏக்கள், எம்பியின் ஆதரவை தெரிவித்தோம்" என்றார். வேறு எந்த கேள்விக்கும் அவர் பதில் கூறவில்லை.
அதிமுக சட்டப்பேரவை கட்சித்தலைவர் அன்பழகன் கூறியது}அதிமுக துணை பொதுச்செயலர் தினகரன் ஆணைப்படி பாஜக வேட்பாளருக்கு புதுச்சேரி மாநில அதிமுக எம்.எல்ஏக்களின் ஆதரவை அமித்ஷாவிடம் தெரிவித்து உறுதிப்படுத்தினோம். கடந்த ஓராண்டாக புதுச்சேரியில் செயல்படாத காங்கிரஸ் ஆட்சி குறித்தும் தெரிவித்தோம்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவின் ரூ.8,000 கூப்பன் திட்டம் ஊழலுக்கு வழிவகுக்கும்: பாஜக!

சேலத்தில் பிரசாரத்தில் பங்கேற்ற ராமதாஸ் மேடையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு நாளை இயங்காது

கோவை சிறையில் கைதிகளுக்கான ரேஷன் பொருள்களை பதுக்கிவைத்தாகப் புகார்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

