பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

தமிழகப் பல்கலைக்கழக பணி நியமனங்களில் ஊழல்:  ராமதாஸ் கண்டனம்

தமிழகப் பல்கலைக்கழக பணி நியமனங்களில் ஊழல் நடைபெற்று வருவதாகக் கூறி, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :14 மார்ச் 2017, 1:56 pm

தமிழகப் பல்கலைக்கழக பணி நியமனங்களில் ஊழல் நடைபெற்று வருவதாகக் கூறி, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர், ஓட்டுநர், உள்ளிட்ட 60 பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் மார்ச் 18,20 தேதிகளில் நடைபெற உள்ளது. ஆனால் பணியிடங்களுக்கு ரூ.3 முதல் ரூ.6 லட்சம் வரை வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், பணம் கொடுத்தவர்களுக்கு மட்டும் நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளதாகவும்  பல்கலைக்கழகத்தின் ஸ்காலர்ஸ் ஃபோரம் என்ற அமைப்பு ஆளுநரிடம் முறையிட்டுள்ளது. 

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மட்டுமின்றி, அண்ணா பல்கலைக்கழகத்திலும், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திலும் உதவி பேராசிரியர்கள், பேராசிரியர்கள் நியமனத்தில் பல கோடி அளவுக்கு ஊழல்கள் நடைபெற்றுள்ளன.
 ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த தமிழக ஆளுநர் உத்தரவிட்டபோதிலும், இன்று வரை யார் மீதும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

மேலும், தமிழகத்தில் உள்ள 5 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், அவற்றை நிர்வகிக்கும் பொறுப்புக் குழுவினர் தங்களின் விருப்பம் போன்று ஊழல் செய்து பல்கலைக்கழகங்களை திவாலாக்கி வருகின்றனர்.

இவற்றுக்கு முடிவு கட்டும் வகையில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களுக்கு தகுதியான கல்வியாளர்களை நியமிக்க வேண்டும். பல்கலைக்கழக நியமன ஊழல்கள் குறித்த விசாரணைக்கு தமிழக ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.