மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2.06 லட்சம் நகை திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 2.06 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.


மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 2.06 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
மலேசியாவிலிருந்து புதன்கிழமை நள்ளிரவு திருச்சி வந்த ஏர் ஏசியா விமான பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டனர். சோதனையில் மலேசியாவிலிருந்து வந்த நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள துளசியாப்பட்டிணம் வண்டுவாஞ்சேரி பகுதியைச் சேரந்த மு. ஷெரிப் என்பவர், தனது உடைமைகளுக்குள் மறைத்து ரூ. 2.06 லட்சம் மதிப்புள்ள 70 கிராம் தங்க நகைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...