மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்: சிங்கப்பூர் நிறுவனம் முதல்வருடன் ஆலோசனை

கடல்நீரைக் குடிநீராக மாறறும்ம்திட்டம் தொடர்பாக சிங்கப்பூர் நிறுவனத்திடம்

News image
Updated On :2 மே 2017, 3:15 pm

சுஜித்குமார்

புதுச்சேரி: கடல்நீரைக் குடிநீராக மாறறும்ம்திட்டம் தொடர்பாக சிங்கப்பூர் நிறுவனத்திடம் முதல்வர் நாராயணசாமி செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.

புதுச்சேரியில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடற்கரையை ஒட்டியுள்ளதால் புதுவையில் நிலத்தடி நீர் உப்புத் தன்மை கலந்ததாக காணப்படுகிறது. இதனால் ஆங்காங்கே குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு 20 லிட்டர் குடிநீர் ரூ.7-க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில் பாதுகாப்பான குடிநீரை வழங்குவது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு திட்டமிட்டு வருகிறது.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்

இந்நிலையில் சிங்கப்பூர் பொறியாளர்கள் என்ற நிறுவனம் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமியை சந்தித்துப் பேசினர். 20 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக மாறறும் திட்டம் குறித்த செயல்விளக்கத்தை காண்பித்தனர். உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா, பொதுப்பணித்துறை தலைமைப்பொறியாளர் சுவாமிநாதன், உளளாட்சி அதிகாரிகள், சிங்கப்பூர் நிறுவன பிரதிநிதிகள் சேதுநாதன், ரகுநாத், சக்கவர்த்தி, சுரேஷ் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:

சிங்கப்பூர் பொறியாளர்கள் நிறுவனம் பல்வேறு நாடுகளில் கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. புதுவையிலும் இத்திட்டத்தை செயல்படுத்துவது மற்றும் கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துதல் தொடர்பாகவும் செயல்விளக்கம் அளித்தனர்.

புதுவையில் 1000 லிட்டர் நீருக்கு எவ்வளவு செலவாகிறது என விளக்கினோம். கடல்நீரை குடிநீராக மாறறும் திட்டத்தை செயல்படுத்தினால், புதுவையில் நிலத்தடி நீர் தேவையின் பயன்பாடு குறையும், நீரும் சேமிக்கப்படும். குடிநீர் மற்றும் கழிவுநீர் மேம்பாட்டுக்காக பிரான்ஸ் நாட்டு அரசு நிதியுதவி செய்கிறது.
அதில் இத்திட்டத்தை செயல்படுத்த ஆலோசிக்கப்படும். மத்திய, மாநில அரசுகளும் இதற்கு நிதி ஒதுக்கலாம்.

சிங்கப்பூர் நிறுவனம் அளிக்கும் அறிக்கையை அரசு பரிசீலிக்கும், பின்னர் பொது ஒப்பந்தம் கோரப்பட்டு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார் நாராயணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.