பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக உள்ளோம்: அமைச்சர் சி.வி.சண்முகம்

இரு அணி இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். அவர்கள்தான் தாமதிக்கின்றனனர் என்று கூறிய அமைச்சர்
பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக உள்ளோம்: அமைச்சர் சி.வி.சண்முகம்
Updated on
1 min read

சென்னை: இரு அணி இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். அவர்கள்தான் தாமதிக்கின்றனனர் என்று கூறிய அமைச்சர் சி.வி.சண்முகம், பிரமாணப் பத்திரத்துக்கும் பேச்சுவார்த்தைக்கும் சம்பந்தமில்லை என்று கூறினார்.

அதிமுகவை இணைப்பதற்காக இரு அணிகளின் சார்பிலும் தலா 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இரு தரப்பிலும் ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

நிபந்தனைகள் ஏற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று பன்னீர்செல்வம் அணியினர் அறிவித்துவிட்டனர். அமைச்சர்களோ, பேச்சுவார்த்தை தொடர்பாக  மாறிமாறி கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

இதனிடையே, சென்னையில் நேற்று நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் - முதல்வர் பழனிசாமியும், ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், அதிமுகவைச் சேர்ந்த இரு அணிகள் இணைப்பதற்காக பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வரவில்லை. தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்துக்கும் பேச்சுவார்த்தைக்கும் சம்பந்தமில்லை. இரு அணிகள் இணைப்பு பற்றிய பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக உள்ளோம் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com