மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தடை உத்தரவை மீறி 9,760 வீட்டு மனைகள் பத்திரப்பதிவு

அங்கீகாரமில்லா வீட்டு மனைகள், கட்டடங்களை பத்திரப்பதிவு செய்ய கடந்தாண்டு செப்டம்பரில் 9-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

News image
Updated On :4 மே 2017, 2:48 pm

DIN

அங்கீகாரமில்லா வீட்டு மனைகள், கட்டடங்களை பத்திரப்பதிவு செய்ய கடந்தாண்டு செப்டம்பரில் 9-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதன் பின்னர், ஏதாவது பத்திரப்பதிவு நடந்துள்ளதா என்பது குறித்து அரசு அறிக்கை அளிக்க வேண்டும். அவ்வாறு பத்திரப்பதிவுகள் நடைபெற்று இருந்தால் அது செல்லாது என, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு, கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி உத்தரவிட்டது.

அதன்படி, அரசு தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகம் முழுவதும் 578 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை மீறி, கடந்தாண்டு செப்டம்பர் 9 முதல் நிகழாண்டு மார்ச் 28-ஆம் தேதி வரை, 9 ஆயிரத்து 760 அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை சார் பதிவாளர்கள் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது என, பத்திரப்பதிவு துறை ஐ.ஜி.ஹன்ஸ்ராஜ் வர்மா உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.