மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

குஷ்பு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு வீட்டிற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலையடுத்து, போலீஸார் அங்கு விசாரணை

News image
Updated On :6 மே 2017, 5:01 am

DIN

சென்னை: நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு வீட்டிற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலையடுத்து, போலீஸார் அங்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், நடிகையுமான குஷ்பு வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு நள்ளிரவு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை ஆம்புலன்ஸ் அலுவலகத்துக்கு வந்த மிரட்டலையடுத்து, குஷ்புவின் பட்டினப்பாக்கம் இல்லத்துக்கு சென்ற போலீஸார், அங்கு சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

போலீஸாரின் விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என தெரியவந்துள்ளது.

அதனையடுத்து, மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது குஷ்பு குடும்பத்துடன் வெளிநாட்டில் இருந்து வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.