/

சரத்குமார் 3வது முறையாக வருமான வரி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜர்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் 3வது முறையாக வருமான வரி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:29 pm

DIN

சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் 3வது முறையாக வருமான வரி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். கடந்த ஏப்ரல் 6ம் தேதி அதிமுக துணை பொதுச் செயலளார் சரத்குமாருக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் அடுத்த நாளே சரத்குமார் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.

இதுதொடர்பாக வருமான வரி அலுவலகத்தில் நேரில் ஆஜராக சரத்குமாருக்கு சம்மன் அளிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே 2முறை சரத்குமார் விசாரணைக்கு ஆஜரானார்.

இந்நிலையில் மூன்றாவது முறையாக இன்று சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வருமனா வரிஅலுவலகத்தில் சரத்குமார் மூன்றாவது முறையாக விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

இன்றைய விசாரணையின் போது அதிகாரிகள் கோரிய ஆவண்ஙகளை தாக்கல் செய்ததோடு, 4 அதிகாரிகள் கொண்ட குழுவின் கேள்விக்கு சரத்குமார் பதிளித்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.