நடப்பு நிதியாண்டில் 4 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 25,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும்: பார்தி ஏர்டெல்

நடப்பு நிதியாண்டில் 4 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 25,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும்: பார்தி ஏர்டெல்
Updated on
1 min read

தொலைதொடர்பு நிறுவனங்களில் மிக முக்கியமான நிறுவனமாக விளங்கும் பார்தி ஏர்டெல் நிறுவனம் நடப்பு நிதியாண்டில் 4 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 25,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து பார்தி ஏர்டெல் தலைமை நிதி அதிகாரி நிலன்ஜன் ராய் கூறும் போது, முன்னதாக நடப்பு நிதியாண்டில் 4 ஜி அலைக்கற்றைக்கென 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படிருந்தது. தற்போது இந்தியாவில் டேட்டா பயன்பாட்டாளர்கள் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு 4 ஜி சுழற்சியை விரிவுப்படுத்த ஏர்டெல்  திட்டமிட்டுள்ளது. 

மேலும் 2 மூன்று ஆண்டுகளில் 3 ஜி. நெட்வொர்க் சேவையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 ஜி சேவையில் இருந்து 50 சதவீதம் பேர் 3 ஜி. சேவைக்கு மாறிவிட்டனர். தற்போது 3 ஜி சேவையில் இருந்து பெரும்பாலானோர் 4 ஜி சேவைக்கு மாறிவருகின்றனர். 

எனவே இன்னும் 2 அல்லது 3 வருடங்களில் 2 ஜி மற்றும் 3 ஜி சேவையை முற்றிலுமாக நிறுத்திவிட்டு 4 ஜிசேவையை விரிவுப்படுத்துவதற்கான ஆயத்தப்பணிகளில் ஏர்டெல் ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com