பருவ மழை நீடிப்பு: 2 ஆண்டுக்கு பிறகு 100 அடியை நெருங்குகிறது பாபநாசம்
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் நீடித்து வரும் மழையால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின்


திருநெல்வேலி: மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் நீடித்து வரும் மழையால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பாபநாசம் அணையின் நீர்மட்டம் 100 அடியை நோக்கி உயர்ந்து வருகிறது.
பருவ மழை பொய்த்ததால் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர் இருப்பு வெகுவாக குறைந்ததை அடுத்து விவசாயம், குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டது. நிகழாண்டு உரிய நேரத்தில் தொடங்கிய வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் தாமிரவருணி பாசனத்தில் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்நது வருகிறது. ஒரு வாரத்தில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் தலா 20 அடி உயர்ந்துள்ளது.
கடந்த 2016 இல் தென்மேற்கு பருவம், வடகிழக்குப் பருவம் ஆகிய இரு பருவக் காலத்திலும் மழை பொய்த்ததால் அணைகள் வறண்டன. தற்போது பருவ மழை நீடித்து வருவதால் 2 ஆண்டுகளுக்கு பிறகு அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. பருவ மழை தொடங்கிய பிறகு பிரதான அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் சேர்வலாறு அணை 100 அடியை தாண்டியது. ஒரு சில தினங்களில் பாபநாசம் அணையும் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு விநாடிக்கு 2785.88 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 1432 கனஅடி, கடனாநதி அணைக்கு 250 கனஅடி, ராமநதி அணைக்கு 70.80 கனஅடி, கருப்பாநதி அணைக்கு 70 கனஅடி, அடவிநயினார் அணைக்கு 58 கனஅடி, வடக்குப் பச்சையாறு அணைக்கு 220.37 கனஅடி, கொடுமுடியாறு அணைக்கு 200 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
பாபநாசம் அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 93.10 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 2.41 அடி உயர்ந்து 107.41 அடி, மணிமுத்தாறு அணை நீர்மட்டம் மேலும் ஓரடி உயர்ந்து 73.80 அடி, கடனாநதி அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 72.50 அடி, ராமநதி அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 64.50 அடி, கருப்பாநதி அணை நீர்மட்டம் 1.31 அடி உயர்ந்து 64.31 அடி, குண்டாறு அணை நீர்மட்டம் 36.10 அடி, அடவிநயினார் அணை நீர்மட்டம் 99.00 அடி, வடக்குப் பச்சையாறு அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 21.00 அடி, நம்பியாறு அணை நீர்மட்டம் 22.70 அடி, கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 52.50 அடியாகவும் இருந்தது.
பதிவான மழை: (மில்லி மீட்டரில்) பாபநாசம் அணை 48, பாபநாசம் கீழ் அணை}48, சேர்வலாறு அணை-28, மணிமுத்தாறு அணை-22.2, கடனாநதி அணை-5, ராமநதி அணை- 38, கருப்பாநதி அணை-4, கொடுமுடியாறு அணை-8, நம்பியாறு அணை-7, கொடுமுடியாறு அணை-5, கன்னடியன் அணைக்கட்டு}38.6, திருநெல்வேலி-7, பாளையங்கோட்டை-18.4, நான்குனேரி-24, ராதாபுரம்-2, களக்காடு}16.4, சேரன்மகாதேவி-15, அம்பாசமுத்திரம்-31.2, செங்கோட்டை-10, ஆலங்குளம்-8.4.
வண்டல்ஓடை நிரம்பியது: தொடர்ந்து பெய்த மழையில் கல்லிடைக்குறிச்சி அருகே கட்டப்பட்டுள்ள 30 அடி கொள்ளளவு கொண்ட வண்டல்ஓடை அணை நிரம்பி வழிகிறது.
பாசனம், குடிநீர் தேவைக்கு பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 304.75 கனஅடி, கடனாநதி அணையில் 60 கனஅடி, ராமநதி அணையில் 35 கனஅடி, கருப்பாநதி அணையில் 25 கனஅடி, குண்டாறு அணையில் 17 கனஅடி, அடவிநயினார் அணையில் 70 கனஅடி, கொடுமுடியாறு அணை நிரம்பியதை அடுத்து உபரிநீர் 200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...