தொடர்ந்து நீர்வரத்து: 100 அடியை எட்டியது பாபநாசம் அணை!

திருநெல்வேலி மாவட்டத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்து வருகிறது.  2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மாலை பாபநாசம் அணை 100 அடியை எட்டியது.
தொடர்ந்து நீர்வரத்து: 100 அடியை எட்டியது பாபநாசம் அணை!
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்து வருகிறது.  2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மாலை பாபநாசம் அணை 100 அடியை எட்டியது.

வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதில் இருந்து மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை நீடித்து வருவதால் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்து வருகிறது. கடந்த 2 வருடங்களாக பருவ மழை பொய்த்ததால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பாசனம் பொய்த்து விட்டன. பிரதான அணைகளும் வறண்டு குடிநீர் பற்றாக்குறை எழுந்தது. 

இதனிடையே, தென்மேற்கு பருவத்தில் இறுதியில் செப்டம்பர் மாதம் பெய்த மழையில் பிரதான அணைகளின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்தது. இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அக். 5 இல் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 

நிகழாண்டு அக். 26 இல் வடகிழக்குப் பருவ மழை தொடங்கியது. நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

கடந்த 2 வாரத்தில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 26 அடியும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 36 அடியும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 27 அடியும் உயர்ந்துள்ளது. வியாழக்கிழமை (நவ. 9) மாலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com