எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்வு!

திருநெல்வேலி மாவட்டத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

News image
Updated On :22 நவம்பர் 2017, 10:29 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அருவியில் 2 ஆவது முறையாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. புதன்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை (அதிகபட்சம்)-105, பாபநாசம் கீழ் அணை-88, சேர்வலாறு அணை-43, கடனாநதி அணை-25, ராமநதி அணை-20,  கருப்பாநதி அணை-17, குண்டாறு அணை-17, அடவிநயினார் அணை-10, கொடுமுடியாறு அணை-10, கன்னடியன் அணைக்கட்டு-19.4, அம்பாசமுத்திரம்-18, சேரன்மகாதேவி-16, ஆலங்குளம்-26.4, தென்காசி-6.2, ஆய்க்குடி-4.8, செங்கோட்டை-2, சங்கரன்கோவில்-22.

பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு விநாடிக்கு 3200 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 780 கனஅடி, கடனாநதி அணைக்கு 271 கனஅடி, ராமநதி அணைக்கு 62 கனஅடி, கருப்பாநதி அணைக்கு 39 கனஅடி, குண்டாறு அணைக்கு 17 கனஅடி, அடவிநயினார் அணைக்கு 72 கனஅடி, வடக்குப் பச்சையாறு அணைக்கு 105.79 கனஅடி, கொடுமுடியாறு அணைக்கு 20 கனஅடியும் நீர்வரத்து உள்ளது.

நிரம்புகிறது கடனாநதி: சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து 107.77 அடி, பாபநாசம் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 100.00 அடி, மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 1.40 அடி உயர்ந்து 83.40 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 64.50 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 65.29 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடி, வடக்குப்பச்சையாறு அணையின் நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 26.50 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம்-21.49 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 41.00 

அடியாகவும் உள்ளது. 84 அடி கொள்ளளவு கொண்ட கடனாநதி அணையின் நீர்மட்டம் 79.00 அடியை தாண்டியது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் ஓரிரு நாளில் முழுக் கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் வெள்ளம்: நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் மணிமுத்தாறு அருவியில் 2 ஆவது முறையாக வெள்ளம் ஏற்பட்டது. பாபநாசம் அகஸ்தியர் அருவியிலும் நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. பாசனத்துக்கு பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 800 கனஅடி, கடனாநதி அணையில் 70 கனஅடி, ராமநதி அணையில் 35 கனஅடி, கருப்பாநதி அணையில் 25 கனஅடி, அடவிநயினார் அணையில் 50 கனஅடி, கொடுமுடியாறு அணையில் இருந்து 60 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப் பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.