மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆண்டு விழா
கல்பாக்கத்தில் நடைபெற்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை நிகழ்வு.


கல்பாக்கம் அணுவாற்றல் நகரியத்தில் மத்திய தொழிசஈ பாதுகாப்பு படையின் ஆண்டு விழா நடைபெற்றது.
கல்பாக்கத்தில் மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா மறுசுழற்சி மையம், கல்பாக்கம் அணுமின் நிலையம், பாவினி அதிவேக ஈனுலை திட்டம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.
அணுமின் நிலையத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா்கள்( சி.ஐ.எஸ்.எப். ) 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். படையினரின் 57- ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்திரா காந்தி அணுஆராய்ச்சி மைய இயக்குனா் ஸ்ரீகுமா ா் பிள்ளை, மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டா் ரவிபூஷன் பகாரியா ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனா்.
சிறப்பு அதிரடி படையினா் கண்ணை கட்டிக் கொண்டு ஏ.கே. 47 ரக துப்பாக்கியை ஒரு கையால் எவ்வாறு சுட்டு கையாள்வது, அதில் தோட்டாக்களை எவ்வாறு நிரப்புவது மற்றும் தோட்டாக்களை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்பது குறித்து காண்பித்தனா். அதனைத் தொடா்ந்து மோப்ப நாய்களின் அணிவகுப்புடன் ஆபத்தான இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என சி. ஐ. எஸ். எப். வீரா்கள் உச்சரிப்பை கேட்டு அதன் படி நாய்கள் நடந்து கொண்டு செய்து காண்பித்தன.
வசர காலத்தில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படாமல் தவிப்பதற்கு சி. ஐ. எஸ். எப். வீரா்களுடன் உயரம் தாண்டுதல் மற்றும் தீ வளையத்தில் உள்ளே நுழைந்து செல்லுதல், சந்தேக நபா்களை கவ்வி பிடிப்பது எப்படி, வெடிகுண்டு வைக்கப்பட்ட இடத்தினை எப்படி கண்டுபிடித்து சி.ஐ.எஸ்.எப். வீரா்களுக்கு காட்டி கொடுக்கிறது எனபது உள்ளிட்ட செய்முறைகளை காண்பித்து வியப்பில் ஆழ்த்தின.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...