எத்தனை முறை அணுகினாலும் மத்திய அரசிடம் நிதி கிடைக்கவில்லை: அமைச்சர் கந்தசாமி வேதனை

 நிதி வேண்டி மத்திய அமைச்சர்களை முதல்வரும், நாங்களும் எத்தனை முறை அணுகினாலும் மத்திய அரசிடம் இருந்து நிதி கிடைக்கவில்லை
Updated on
1 min read

புதுச்சேரி:  நிதி வேண்டி மத்திய அமைச்சர்களை முதல்வரும், நாங்களும் எத்தனை முறை அணுகினாலும் மத்திய அரசிடம் இருந்து நிதி கிடைக்கவில்லை என நலத்துறை அமைச்சர் கந்தசாமி வேதனை தெரிவித்துளளார்.

புதுச்சேரி அரசின் ஆதி திராவிடர் நலத்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மற்றும் சமூக நலத்துறையில் பணிபுரியும் 11 நல ஆய்வாளர்களுக்கு நல அதிகாரியாக பதவி உயர்வு ஆணைகளை சனிக்கிழமை அமைச்சர் கந்தசாமி வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த ஆட்சியில் ரூ.250 கோடியை மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தாமல், ஏற்கெனவே அவர்கள் வைத்திருக்கின்ற மிக்சி கிரைண்டர் வழங்கி தேவையற்ற செலவை செய்தனர். ஜிஎஸ்டியால் பல தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவால் மதுபானக்கடைகள் மூடப்பட்டு அரசுக்கு கலால் வரி பாதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் எத்தனை முறை அணுகினாலும் மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற முடியவில்லை. அரசின் இலவச சிட்டங்கள் அனைத்தும் எங்களது ஆட்சியில் தகுதியானவர்களுக்கே சென்று சேரும்.

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு சென்டாக் உதவி தொகை 100 சதவீதம் வழங்குவோம் எனக் கூறி தான் ஆட்சிக்கு வந்தோம். அது தொடர்பாக துணைநிலை ஆளுநருக்கு கோப்புகளை அனுப்பியும் அவர் அனுமதி தரவில்லை.

இன்னும் இரண்டு வாரங்களில்  மீனவர்கள் தொழிலுக்கு செல்லும் வகையில் துறைமுக முகத்துவாரம் ஆழப்படுத்தப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com