எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

முகத்தை அடையாளம் கண்டுகொள்ளும் வசதியுடன் ஐபோன்-8, 8 பிளஸ் மாடல் வெளியீடு

உலகமே எதிர்பார்த்துக்காத்திருக்கும் ஐ-போன் - 8 மிகவும் பிரம்மாண்ட முறையில் வெளியாகவுள்ளதாக அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

News image
Updated On :13 செப்டம்பர் 2017, 11:16 am

DIN

உலகமே எதிர்பார்த்துக்காத்திருக்கும் ஐ-போன் - 8 மிகவும் பிரம்மாண்ட முறையில் வெளியாகவுள்ளதாக அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.இதன் ஃபஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

உலகின் புகழ்பெற்ற நிறுவனமான அப்பிள் நிறுவனம் ஆண்டு தோறும் ஒவ்வொரு செப்டம்பர் மாதங்களில் தனது புதிய தயாரிப்புகளை வெளியிட்டு வருகிறது. 

உதாரணமாக, ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் தயாரிப்புக்கு பிறகு  கடந்த ஆண்டு ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஆகிய இரண்டு ஐபோன்  வெளியானது எனினும் இதில் போதுமான மாற்றங்கள் இல்லை,

எனவே இந்த ஆண்டு பல மாற்றங்களுடன் புதிய மாடல் ஐ-போனை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதனடிப்படையில் புதிய ஐபோன்கள் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ்-ல் முக்கியமான அம்சங்களைக் காண்கிறோம். இந்த போன்களில் முகத்தை அடையாளம் கண்டுகொள்ளும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

மேலும் 4கே தொழிற்நுட்பத்தின் கூடிய டி.வி, எல்.டி.இ. வசதியுடன் கூடிய வாட்ச், உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகவிருக்கின்றன. கவர்ச்சிகரமான வண்ணங்களுடன் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஆகியவை முறையே 4.7-அங்குல மற்றும் 5.5 அங்குல அளவுகள் உள்ளது 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.