பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

அண்ணா பல்கலை துணை வேந்தராக எம்.கே. சூரப்பா நியமனம்

கர்நாடகத்தைச் சேர்ந்த எம்.கே,சூரப்பா அண்ணா பல்கலை துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். 

News image
Updated On :5 ஏப்ரல் 2018, 9:52 pm IST

கர்நாடகத்தைச் சேர்ந்த எம்.கே. சூரப்பா அண்ணா பல்கலை துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். 

சென்னை அண்ணா பல்கலை கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர் ராஜாராம்.  இவரது பணி காலம் கடந்த 2016 மே 26ல் நிறைவடைந்தது.  இதனை தொடர்ந்து அந்த பதவிக்கு 2 வருடங்களாக துணைவேந்தர் யாரும் நியமிக்கப்படாத நிலையில், துணைவேந்தராக எம்.கே. சூரப்பாவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று நியமித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலை கழகத்தின் துணைவேந்தராக அவர் 3 ஆண்டுகள் இருந்திடுவார்.  இவர் ஐ.ஐ.டி. இயக்குநராக 6 ஆண்டுகள் பணியாற்றியவர்.  இந்திய அறிவியல் நிறுவனத்தில் 24 ஆண்டுகள் பேராசிரியராகவும் பணியாற்றி உள்ளார்.

உலோக பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ள சூரப்பா 150 ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார்.  தனது 4 ஆய்வு கட்டுரைகளுக்கு காப்புரிமையும் பெற்றுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.