புதுதில்லி: தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் இறக்கை, அங்கு நின்றிருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதியதால் பரபரப்பு நிலவியது. இதில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்வசமாக உயிர்தப்பினர்.
துபாயில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3வது முனையத்திற்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று வந்தடைந்தது. அப்போது, விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு வேன் மீது விமானத்தின் இறக்கை மோதியதில், விமானம் லேசாக குலுங்கியதால் விமானத்தில் பயணித்த 8 விமானிகள் மற்றும் பயணிகள் 125 பேரும் அதிர்ச்சியடைந்தனர். இதில் விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
இதுகுறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தினை சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், விமானிகள் மற்றும் பயணிகள் என அனைவரும் விமானத்தில் இருந்து பாதுகாப்புடன் வெளியேறினர். பி737 விமானத்தை விமான நிறுவன தொழில்நுட்ப குழுவினர் பரிசோதனை செய்து வருவதாக கூறினார்.
இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கருப்பு 3-வது பாடல்!

சூரிய மின் திட்டங்களில் ரூ. 3,800 கோடி முதலீடு செய்யும் கெயில்!

கிரிக்கெட் வீரராக நடிக்கும் ஜிவி பிரகாஷ்!

நெசவாளர்களுக்கு ரூ. 10 லட்சம் காப்பீடு: விஜய் வாக்குறுதி
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


