இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை தில்லி பயணம்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை தில்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

News image
Updated On :18 ஏப்ரல் 2018, 5:21 pm IST

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை தில்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அரசுத் திட்டங்கள் குறித்து பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தியது, பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை நடத்த உத்தரவிட்டது, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சூரப்பாவை நியமித்தது என பல்வேறு விவகாரங்களில் ஆளுநர் தனது அதிகார வரம்பை மீறி நடந்து கொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதனிடையே, பெண் பத்திரிகையாளர் ஒருவரை ஆளுநர் பன்வாரிலால் கன்னத்தில் தட்டிய விவகாரம் தற்போது கடும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. ஆளுநர் மீது பல்வேறு தரப்பிலும் விமர்சனம் வலுத்து வரும் நிலையில்,   அவரைத் திரும்பப் பெற வலியுறுத்தி திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. 

இதனிடையே தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை தில்லி செல்கிறார். தொடரும் சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகளுக்கு நடுவே ஆளுநர் டெல்லி செல்வது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.